வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை
வடகிழக்கு அமெரிக்காவில் ஒரே இரவில் பெய்த கனமழையால் நியூயார்க்கின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து, விமான நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்புகள் சீர்குலைந்துள்ளன. இந்நிலையில், நியூயார்க் நகரத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் ஒரு வீடியோவில் பொது சொத்துக்கள் உடைந்து விழும் நிலையில் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கிடையில், பல தசாப்தங்களுக்கு பிறகு வரலாறு காணாத மழை நியூயார்க்கில் பெய்ததை அடுத்து, அந்த நகரத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ சேவைகள் முழுவதுமாக செயல்படவில்லை. இருப்பினும், வெள்ளத்திற்கு மத்தியிலும் மக்கள் சாதாரணமாக நடமாடி கொண்டிருப்பது போல் தான் தெரிகிறது.