பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள்
அமெரிக்கா: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) அதிகாரிகள் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி பயணிகளின் உடமைகளில் இருந்து குறைந்தது $600(கிட்டத்தட்ட 50,000 ரூபாய்) ரொக்கத்தையும் பிற பொருட்களையும் அந்த அதிகாரிகள் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் குற்றவாளிகளான ஜோசு கோன்சலஸ்(20) மற்றும் லாபரியஸ் வில்லியம்ஸ்(33) ஆகியோர் கடந்த ஜூலை மாதம், அமலாக்க அதிகாரிகள் சோதனைச் சாவடியில் நடந்த திருட்டு புகார்களை விசாரிக்கத் தொடங்கியபோது கைது செய்யப்பட்டனர். அந்த திருட்டு சம்பவத்தின் போது பதிவான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.