இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா
இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கி உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தேக்கமடைந்துள்ள விசாக்களை விரைந்து விநியோகிக்க முயற்சி எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டில், "2023 ஆம் ஆண்டு 10 லட்சம் விசாக்களை அளித்து எங்களது இலக்கை எட்டி உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட 10 லட்சம் இலக்கை அடைந்து விட்டோம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்". "நாங்கள் இத்தோடு நின்று விடாமல் வரும் மாதங்களில் நிறைய விசா கோரிக்கைகளை பரிசீலித்து இந்தியர்களுக்கு அமெரிக்காவிற்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்குவோம்" என பதிவிடப்பட்டிருந்தது.