பாலக்காடு தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். ஓஹியோ மாநிலத்தில், 1985ஆம் ஆண்டு பிறந்த இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளராக பார்க்கப்படுகிறார். இவர் சட்டத்தில் பட்டம் பெற்றவர். அதுமட்டுமின்றி மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது பெற்றோர், பாலக்காட்டில் பிறந்து, அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். அதிபர் தேர்தலில், விவேக் ராமசாமியின் வெற்றி பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் இவருக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அமெரிக்கா மாகாணம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாடிய விவேக், அங்கிருந்த ஒரு தமிழரிடம், கொஞ்சும் பாலக்காடு தமிழ் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழில் உரையாடிய விவேக் ராமசாமி
#Watch | அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ள குடியரசு கட்சியின் விவேக் ராமசாமி, வேலூரைச் சேர்ந்தவரிடம் தமிழில் உரையாடல்#SunNews | #VivekRamaswamy | #Tamil | @VivekGRamaswamy pic.twitter.com/k9HqJzS3iF— Sun News (@sunnewstamil) September 26, 2023