அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவுக்கான அளவை வகுப்பது கடினம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
ஐநா பொதுசபை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அமைச்சர் ஜெயசங்கர், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செலிபிரேட்டிங் கலர்ஸ் ஆப் பிரண்ட்ஷிப்(Celebrating Colours of Friendship) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றினார்.
மேலும் அமைச்சர் பேசியதாவது "இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு எதை நோக்கி செல்கிறது என நான் அடிக்கடி கேட்கப்படுகிறேன், ஆனால் எனக்கு அதன் வரம்புகளை வரையறுக்கவோ, எதிர்பார்ப்புகளை கேட்கவோ கடினமாக உள்ளது"
"ஏனென்றால் அது எதிர்பார்ப்புகளை கடந்து விட்டது. அதனால் தான் இன்று என்னால் வரையறுக்க முடியவில்லை, நாங்கள் ஒவ்வொரு முறையும் அதை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்" என்றார்.
2nd card
ஜி-20 மாநாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டிற்கு அமெரிக்கா அளித்த ஆதரவை பொதுமக்கள் முன் அமைச்சர் ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார்.
"ஜி- 20 மாநாட்டை வெற்றியடையச் செய்ய அமெரிக்கா அளித்த ஆதரவையும், பங்களிப்பையும் நான் பொதுவெளியில் மக்கள் முன் அங்கீகரிக்க விரும்புகிறேன்"
"ஜி- 20 மாநாட்டின் வெற்றி நேர்முகமாக பார்த்தால் இந்தியாவின் வெற்றி, ஆனால் நான் அதை ஜி 20 நாடுகளின் வெற்றியாக பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரையில் இதை இந்திய-அமெரிக்க உறவுக்கான வெற்றியாக நினைக்கிறேன்".
"இந்த உறவு சந்திரானைப் போல் நிலவுக்கும் அதைத் தாண்டியும் பயணிக்கும் என நான் சத்தியமாக சொல்கிறேன்" என பேசினார்.