அமெரிக்கா திரும்பினார் வடகொரியாவால் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்
கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக வடகொரிய எல்லையை கடந்த அமெரிக்க ராணுவ வீரர் டிராவீஸ் கிங் மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். அமெரிக்க ராணுவத்தில் உளவு பிரிவில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த 23 வயதான டிராவீஸ் கிங், ஜூலை மாதம் சட்டவிரோதமாக தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைந்தார். சட்டவிரோதமாக வடகொரியாவிற்குள் நுழைந்ததற்காக ட்ராவல்ஸ் கிங் கைது செய்யப்பட்டார். கிங் கைது செய்யப்பட்டது முதல் அவரை விடுவிக்க அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுவந்தது. வட கொரியாவில் அமெரிக்காவுக்கான தூதரகம் இல்லாததால், வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள ஸ்வீடனின் தூதரகம் மூலம் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் பேச்சு வார்த்தைகளால் ஏற்பட்ட உடன்பாட்டில், கிங், ஸ்வீடன் அதிகாரிகளால் சீன எல்லையில் அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.