அமெரிக்கா: செய்தி
அமெரிக்காவில் வெளியானது ஹ்யூமேன் நிறுவனத்தின் புதிய சாதனமான 'AI பின்'
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது தங்களுடைய முதல் கேட்ஜட்டான 'AI பின்'னை (AI Pin) அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம்.
இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம்
இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளின் இடையே நல்லுறவு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று(நவ.,10)டெல்லியில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ்
கொரோனா காலத்திற்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்து வந்த, இந்தியாவின் முன்னாள் மதிப்புமிக்க ஆன்லைன் கற்றல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவில் தற்போது பல்வேறு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறது.
2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம்
இந்தியாவின் விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வரும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன.
உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்
நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?
அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராம் நிறுவனம் அதன் 2025 1500 ராம்சார்ஜர் என்ற எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது.
"அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் "அழிவுகரமான" கொள்கைகளால் அணு ஆயுதம், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte
தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள்
ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.
12 நாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: JN.1 கொரோனா குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர்
ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் அதிக வருவாயில்லை எனக் கூறும் நிலையில், 70 வயதான ஊபர் பயணிகள் கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் ஊபர் ரைடுகள் மூலமாக ரூ.23 லட்சம் வருவாய் ஈட்டியிருக்கிறார்.
'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீவொர்க் (WeWork) நிறுவனமானது நியூ ஜெர்ஸி ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுசீரமைப்பு திவால் கோரி பதிவு செய்திருக்கிறது.
காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.
"சிங்கத்துடன் டூப் போடாமல் சண்டை, பயந்து ஓடிய குதிரையின் கீழ் கமல்": பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சிவகுமார்
நாளை தனது 68வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு, நடிகர் சிவகுமார் பழைய நினைவுகளை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் மேற்குக் கரைக்கு இன்று உயர் பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.
எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் சிலையின் உருவாக்கத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
எகிப்தில் அமைந்திருக்கும் ஸ்பிங்ஸ் சிலை (Sphinx Statue) எப்படி உருவாகியிருக்கலாம் எனத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா
அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோ ஷேவ் நவம்பர்: ஆண்கள் ஏன் இதை கடைபிடிக்கிறார்கள்?
ஒவ்வொரு வருடம் நவம்பர் மாதம் 'நோ ஷேவ் நவம்பர்' (No Shave November) மாதமாக உலகம் முழுவதும் உள்ள ஆண்களால் கடைபிடிக்கப்படுகிறது.
காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சியாட்டிலில் இருந்து மயாமி நகருக்குக் குடிபெயரும் ஜெஃப் பஸாஸ்
உலகின் இரண்டாவது பணக்காரரும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பஸாஸ், 29 ஆண்டுகளாகக் தான் குடியிருந்த சியாட்டில் நகரை விட்டு அமெரிக்காவின் ஃப்ளேரிடா மாகாணத்திலுள்ள மயாமி நகருக்கு குடிபெயர்வதாக அறிவித்திருக்கிறார்.
அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவருக்கு கத்தி குத்து
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 24 வயது இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா
காசாவில் இன அழிப்பை தடுக்க முடியாத, ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்து, அந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குனர் கிரேக் மொகிபர் ராஜினாமா செய்துள்ளார்.
பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசாவில் ஜபாலியா பகுதியில் உள்ள மிகப்பெரிய பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.
பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்
மூன்று வாரங்களுக்கு முன் ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை அக்குழு பிணைய கைதிகளாக பிடித்து சென்று காசா பகுதியில் அடைத்து வைத்தது.
பிரெண்ட்ஸ் தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரி மனஅழுத்தத்தில் இருந்தாரா?
புகழ்பெற்ற ஃப்ரண்ட்ஸ் சிட்காம் தொடரில், சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி அமெரிக்காவில் தனது வீட்டில் உயிரிழந்தார்.
செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்
செவ்வாய் கிரகத்தில் இயங்கும் முதல் ஹெலிகாப்டரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்காக இந்தியர் உருவாக்கியுள்ளார்.
'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற சிட்காம் தொடரான 'பிரண்ட்ஸில்,' சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
2024 அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து வெளியேறினார் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ்
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான போட்டியிலிருந்து, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியேறினார்.
புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய கிரீன் கார்டு பரிந்துரையில் அதிக வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பயன்பெறுவார்கள்.
"போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்
போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, பிடித்து வைத்திருக்கும் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய, ஈரானின் புரட்சிகர காவலர் படையின் தளங்கள் மீது, தெற்கு சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது.