Page Loader
"சிங்கத்துடன் டூப் போடாமல் சண்டை, பயந்து ஓடிய குதிரையின் கீழ் கமல்": பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சிவகுமார்
கமலஹாசனும், சிவகுமாரும் 8 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

"சிங்கத்துடன் டூப் போடாமல் சண்டை, பயந்து ஓடிய குதிரையின் கீழ் கமல்": பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சிவகுமார்

எழுதியவர் Srinath r
Nov 06, 2023
03:09 pm

செய்தி முன்னோட்டம்

நாளை தனது 68வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு, நடிகர் சிவகுமார் பழைய நினைவுகளை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சிவகுமார், கமலஹாசனுக்கு எழுதிய வாழ்த்து மடலில், "நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்". "அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செய்து விட்டார்". "கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்" என புகழ்ந்துள்ளார் சிவக்குமார்.

2nd card

8 படங்களில் இணைந்து நடித்த சிவக்குமார், கமலஹாசன்

மேலும் அவர், "அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படத்தில் டூப் போடாமல் நீங்கள் சிங்கத்துடன் மோதியவர். மீண்டும் ஒரு சூரியோதயம் திரைப்படத்தில் மிரண்டு ஓடிய குதிரைக்கு அடியில் சிக்கி, கால் எலும்பு முறிய நடித்தவர் நீங்கள்". "1973-ல், 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்று துவங்கி 'தங்கத்திலே வைரம்', 'மேல்நாட்டு மருமகள்'- என 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம்". "நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள். வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல்".

3rd card

கமலின் அரசியல் வாழ்விற்கு வாழ்த்து சொன்ன சிவகுமார்

சிவகுமார் தனது வாழ்த்து மடலில், கமலஹாசனை அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை தோல்வியுற்ற ஆபிரகாம் லிங்கனுடன் இணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது." "அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்." "அரசியலிலும், திரையிலும் சாதித்தத்தை நீங்கள் அரசியலிலும் சாதிக்க முடியும்; துணிந்து இறங்குங்கள்" என அவர் எழுதிய வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்.