பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்
மூன்று வாரங்களுக்கு முன் ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கிய போது, நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை அக்குழு பிணைய கைதிகளாக பிடித்து சென்று காசா பகுதியில் அடைத்து வைத்தது. அமெரிக்க அரசாங்கம் அவர்களை விடுவிக்கவும் பாதுகாப்பாக மீட்கவும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது. இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வரும் நிலையில், காசாவில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல், எகிப்து, ஐநா மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், ஹமாஸ் அமெரிக்க முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஹமாஸ் செவி சாய்க்க மறுப்பு
சுமார் 200 பிணையக்கைதிகள் காசாவில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை தப்பிக்கவிடாமல் தடுக்க, ரஃபா எல்லையை ஹமாஸ் தடுத்து வைத்துள்ளது.காசாவில் இருந்து தப்பிப்பதற்கு இதுதான் ஒரே வழியாகும். "காசாவில் இருந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா இராணுவப் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது." என்று திங்களன்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், ஹமாஸ் உடனான அமெரிக்க கலந்துரையாடல்களில் முக்கியமான இடைத்தரகராக செயல்படும் கத்தாரின் பிரதம மந்திரியும் வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தொடர்பில் இருந்து வருகிறார். எனினும், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஹமாஸ் செவி சாய்க்க மறுத்து வருகிறது.