
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கு ஒன்பதாவது முறையாக வரும் ஆஸ்டின், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் உடன், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கிருக்கிறார்.
மேலும் லாயிடு ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் ஐந்தாவது 2+2 மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
அதன் பின்னர் இரு செயலாளர்களும், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்தியா பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்டின், தென்கொரியா மற்றும் இந்தோனேசியா செல்கிறார்.
2nd card
2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்றால் என்ன?
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, இந்தியா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் அமெரிக்க சார்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரும், இந்தியா சார்பில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டில் கவலைக்குரிய பொதுவான விஷயங்களை விவாதிக்கப்படும்.
நடைபெற இருக்கும் இப்போதைய சந்திப்பில், அமெரிக்காவிடம் அதிநவீன ஆயுதங்களை இந்தியா வழங்க கேட்கலாம் என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவிடம் இந்தியா ஏற்கனவே, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 31 MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க ஒப்பந்தமட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.