Page Loader
இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?
இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன ?

இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?

எழுதியவர் Nivetha P
Nov 09, 2023
07:35 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா கம்மம் மாவட்டத்தினை சேர்ந்தவர் வருண் ராஜ் புச்சா(24). இவர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் வால்பரைஸோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பினை பயின்றும் வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் 29ம்தேதி கொலைவெறியுடன் சக மாணவரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். இதனிடையே அவர் இன்று(நவ.,9) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, வருண் ராஜா புச்சுவை அவரது சக மாணவரான ஜோர்டன் ஆண்ட்ரேட் என்பவர் கடந்த 29ம் தேதி உடற்பயிற்சி மையத்தில் வைத்து கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்டார்.

மரணம் 

கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் 

கத்தியால் குத்திய காரணம் என்ன? என்று காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், சம்பவம் நடந்த தினத்தன்று தான் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் மசாஜ் அறைக்கு சென்றதாகவும், அங்கே வருண் ராஜ் புச்சாவும் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், 'அவர் பார்க்க விசித்திரமாக காணப்பட்டார். அவரால் எனக்கு ஆபத்து என்று தோன்றியது. அதனால் தான் குத்தினேன்' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். எங்கே குத்தினீர்கள் என்று காவல்துறை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் கத்தியை இறக்கினேன். அது அவரது தலையில் பாய்ந்தது' என்று கூறியுள்ளார். இவரது இந்த பதில் காவல்துறையினரையே அதிரவைத்துள்ளது. இதற்கிடையே, வரும் பயின்ற பல்கலைக்கழகத்தில் அவருக்கு வரும் 16ம் தேதி நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.