
அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவு
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்துள்ளார்.
இந்த சட்ட திருத்தத்திற்கு ஏற்கனவே ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதிய அளித்திருந்த நிலையில், கீழவையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதிபர் புடின் கையெழுத்திட்டதால் இன்று முதல் அமலாகிறது.
கடந்த 1996 உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அணு ஆயுதங்களின் நேரடி சோதனைகள் உட்பட அனைத்து அணு வெடிப்புகளையும் தடை செய்கிறது.
இருப்பினும் சில முக்கிய நாடுகள் அதை அங்கீகரிக்காததால், இது பயனுள்ளதாக இருக்கவில்லை.
கடந்த அக்டோபர் மாதம், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான எண்ணத்தை ரஷ்யா வெளிப்படுத்தி இருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் நிலையை பின்பற்றியே ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ரஷ்யா
#BREAKING Putin revokes Russia's ratification of nuclear test ban treaty pic.twitter.com/mYPzDxMnlh
— AFP News Agency (@AFP) November 2, 2023