
நோ ஷேவ் நவம்பர்: ஆண்கள் ஏன் இதை கடைபிடிக்கிறார்கள்?
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு வருடம் நவம்பர் மாதம் 'நோ ஷேவ் நவம்பர்' (No Shave November) மாதமாக உலகம் முழுவதும் உள்ள ஆண்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில் ஆண்கள் சேவிங் செய்யாமல், தாடியை வளர விடுவர். இது ஏதோ ஸ்டைலுக்காகவும், பேஷனுக்காகவும் ஆண்கள் செய்வதாக நீங்கள் நினைத்தால் அது தவறு.
இதற்கு பின்னால் ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்க்கு உதவ வேண்டும் என்ற பெரிதான நோக்கம் உள்ளது.
நோ ஷேவ் நவம்பர் எப்போது தொடங்கியது என்ற முழு வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
நோ ஷேவ் நவம்பர் 2009 ஆம் ஆண்டு முதலில் தோற்றுவிக்கப்பட்டது
அமெரிக்காவின் சிக்காகோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினரால் 2009 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. நோ ஷேவ் நவம்பர் அமைப்பு ஆண்களை 30 நாளைக்கு ஷேவிங் செய்யாமல் இருக்க ஊக்குவிக்கிறது.
நவம்பர் 2007 ஆம் ஆண்டு பெருங்குடல் புற்றுநோயால் தனது உயிரை இழந்த அவர்களது தந்தை மாத்யூ ஹில்லை கௌரவிப்பதற்காக இது தோற்றுவிக்கப்பட்டது.
புற்றுநோயால் முடியை இழக்கும் வரை அதை எளிதாக எடுத்துக் கொள்ளும் ஆண்கள், தங்கள் முடியை பராமரிப்பதற்காக இந்த மாதம் பயன்படும் என இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
3rd card
ஆண்களின் புற்று நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோ ஷேவ் நவம்பர்
நோ ஷேவ் நவம்பர், புற்றுநோய் பற்றிய உரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
மேலும் ஆண்கள் தாங்கள் ஷேவிங் செய்ய பயன்படுத்தும் நிதியை புற்றுநோய் நோயாளிகளுக்காக வேலை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கி உதவவும் இது கடைபிடிக்கப்படுகிறது.
நோ ஷேவ் நவம்பரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சில ஆண்கள் தொடங்கிய 'மொவெம்பேர்' இயக்கத்தினுடைய நீட்சியாகவே சொல்ல வேண்டும்.
'மொவெம்பேர்' இயக்கமும் நவம்பர் மாதத்தில் ஆண்கள் ஷேவிங் செய்வதை தவிர்த்து, அதில் சேமிக்கும் பணத்தை ஆண்களுக்கான சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதை ஊக்குவிக்கிறது.
4th card
இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்த இயக்கங்கள்
'மொவெம்பேர்' மற்றும் 'நோ சேவ் நவம்பர்' இயக்கங்கள் தற்போது வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையின் மூலம் திரட்டி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நன்கொடையை புரோஸ்டேட், டெஸ்டிகுலர் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பிரபலமான இந்த இயக்கத்திற்கு, எதிர்ப்புகளும் வராமல் இல்லை.
கடந்த 2012 முதல் 2015 ஆண்டு வரை இந்த இயக்கமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த "மொவெம்பேர் ஆண்களை தவறாக வழிநடத்துகிறதா?" என்ற ஆய்வு அறிக்கை, இந்த இயக்கம் தொடங்கப்பட்டதின் உண்மையான நோக்கத்தை அடையவில்லை என விமர்சித்திருந்தது.