"அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் "அழிவுகரமான" கொள்கைகளால் அணு ஆயுதம், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. "அமெரிக்காவின் அழிவுகரமான கொள்கைகளின் இயற்கையான விளைவு உலகப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சீரழிவு ஆகும்", "இதனால் அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது" என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் கூறியதாக தேசிய செய்தி முகம்மையான டிஏஎஸ்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவில் உள்ள மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்து முயன்றதாக நிகோலாய் பட்ருஷேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள், தாலிபான்களுக்கு விற்கப்படுவதாக பூடின் குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் வழங்கும் ஆயுதங்கள், கள்ளச் சந்தை மூலம் விற்கப்பட்டு தாலிபான்களின் கைகளுக்கு சென்றடைவதாக, ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூடின் கூறியதற்கு சில நாட்களுக்குப் பின் பட்ருஷேவ்வின் இந்த அறிக்கை வந்துள்ளது. "உக்ரைனில் இருந்து மத்திய கிழக்குக்கு ஆயுதங்கள் செல்வதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆமாம் செல்கிறது. ஏனென்றால் அவை விற்கப்படுகிறது" என ரஷ்ய அதிபர் குற்றம் சாட்டியிருந்தார். உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது முதல், மேற்கத்திய நாடுகள் உக்கரையனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் ஆயுதங்கள், தவறான வழியில் பயன்படுத்தப்படாததை உறுதி செய்யும்படி உக்கிரனிடம் பலமுறை, மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.