Page Loader
பிரெண்ட்ஸ் தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரி மனஅழுத்தத்தில் இருந்தாரா? 
மேத்யூ பெர்ரின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரெண்ட்ஸ் தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரி மனஅழுத்தத்தில் இருந்தாரா? 

எழுதியவர் Srinath r
Oct 30, 2023
02:02 pm

செய்தி முன்னோட்டம்

புகழ்பெற்ற ஃப்ரண்ட்ஸ் சிட்காம் தொடரில், சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி அமெரிக்காவில் தனது வீட்டில் உயிரிழந்தார். பெர்ரி, 54, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி இருந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. மேலும் அவரது வீட்டில் மன அழுத்தத்திற்கு எதிராக உட்கொள்ளும் மருந்துகளை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் என்றும், சட்டவிரோதமான போதை பொருட்களை அவர் பயன்படுத்தவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த மருந்துகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், அவர் சமீப காலங்களில் மன அழுத்தத்தில் இருந்தது உறுதியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பெர்ரி வீட்டில் கண்டெடுக்கப்பட்டு பல்வேறு மருந்துகள்