
'பிரண்ட்ஸ்' தொடரில் நடித்திருந்த பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி 54 வயதில் காலமானார்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா: பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான "பிரண்ட்ஸ்" இல் சாண்ட்லர் பிங்காக நடித்திருந்த நடிகர் மேத்யூ பெர்ரி தனது 54 வயதில் காலமானார்.
அமலாக்கத்துறை அவரது மரணத்தை உறுதி செய்த்துள்ளது. ஆங்கில ஊடகங்களில் இந்த செய்தி தீயாக பரவி கொண்டிருக்கிறது.
செய்திகளின்படி, சனிக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பெர்ரி உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஒரு குளிக்கும் தொட்டியில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் அந்த இடத்தில் எந்த போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், பெர்ரி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 19, 1969இல் மாசசூசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ்டவுன் என்ற அழகிய நகரத்தில் பிறந்த மேத்யூ பெர்ரியின் வாழ்க்கைப் பயணம் வெற்றியும் போராட்டங்களும் நிறைந்தது.
ட்விட்டர் அஞ்சல்
சாண்ட்லர் பிங் உயிரிழந்தார்
'Friends' star Matthew Perry passes away at 54
— ANI Digital (@ani_digital) October 29, 2023
Read @ANI Story | https://t.co/1NnKsX2x3Q#MatthewPerry #Friends #LosAngeles pic.twitter.com/TNyFNSzzJO
சப்ஜெவ்க்
பெர்ரியின் வாழ்க்கைப் பயணம்
மாசசூசெட்ஸில் பிறந்த பெர்ரி, ஒரு இளைஞனானதும் தனது கனவுகளைப் பின்தொடர்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றார்.
அதன் பின், சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 1987 முதல் 1988 வரை 'பாய்ஸ் வில் பி பாய்ஸ்' என்ற தொடரில் சாஸ் ரஸ்ஸலாக நடித்தார்.
அதனை தொடர்ந்து, 1994இல் பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான "பிரண்ட்ஸ்" இல் சாண்ட்லர் பிங்காக அவர் நடிக்க தொடங்கினார். இந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது.
இதற்கிடையில், போதைப்பொருள்களில் இருந்து மீழ அவர் தனது வாழ்க்கை முழுவதும் தீவிரமாக போராடி வந்தார்.
அவர் 1997ஆம் ஆண்டிலும், 2001ஆம் ஆண்டிலும் போதைப்பொருட்களை அதிகம் உபயோகோததற்காக சிகிசை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.