காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைக்கு, 'போர் நிறுத்தம்' என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஹமாஸின் இராணுவப் பிரிவு, எஸெடின் அல்-கஸ்ஸாம் படையணி, இஸ்ரேல் வீரர்கள் கருப்பு பைகளில் திரும்பி செல்வர் என எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீனப் போர், 27வது நாளாக நீடித்து வரும் நிலையில், காசாவிற்குள் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கை, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் நேற்றைய போர் நிறுத்த வலியுறுத்தலுக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2nd card
இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்
போர் தொடங்கியதற்கு பின், இரண்டாவது முறையாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றுள்ளார்.
அங்கு அவர், "காசாவில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக" தெரிவித்தார்.
இஸ்ரேல் தொடர்ந்து காசாவின் பல பகுதிகளில் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 9,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 50% நபர்கள் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குடிமக்கள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், போரில் மோசமாக காயம் அடைந்தவர்கள் ஆகியோர் காசாவில் இருந்து வெளியேற ரஃபா எல்லையை எகிப்து இரண்டு நாட்களுக்கு முன்னர் திறந்தது.
நேற்று ரஃபா எல்லை வழியாக, 72 குழந்தைகள் உட்பட 344 வெளிநாட்டினர் வெளியேறினர்.