ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா
காசாவில் இன அழிப்பை தடுக்க முடியாத, ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்து, அந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குனர் கிரேக் மொகிபர் ராஜினாமா செய்துள்ளார். "மற்றொரு முறை இன அழிப்பு நம் கண் முன் அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம். இந்த அமைப்பு அதை தடுக்க சக்தி இல்லாததாக உள்ளது" என அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். மேலும் அவர் அந்த பதிவில், ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பெரும்பான்மையான ஐரோப்ப நாடுகள் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக கண்டனம் தெரிவித்தார். பல தசாப்தங்களாக மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்களால், பாலஸ்தீனிய மக்களை மனிதநேயமற்றவர்களாக காட்டப்படுவதையும் அவர் கண்டித்துள்ளார்.