Page Loader
ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர்
ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர்

ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர்

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 07, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் அதிக வருவாயில்லை எனக் கூறும் நிலையில், 70 வயதான ஊபர் பயணிகள் கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் ஊபர் ரைடுகள் மூலமாக ரூ.23 லட்சம் வருவாய் ஈட்டியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயதாகும் பில் என்பவர் தன்னுடைய பணி ஓய்விற்குப் பிறகு ஊபர் ஓட்டுநராகப் பணியில் இணைந்திருக்கிறார். தனக்கு வரும் ரைடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 30%-தத்திற்கும் மேற்பட்ட ரைடுகளைக் கேன்சல் செய்திருக்கிறார் அவர். மேலும், தனக்கு வரும் ரைடுகளில் வெறும் 10%-தத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். 2022ம் ஆண்டு 1,500 ட்ரிப்கள் மூலம் 28,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம்) சம்பாதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

ஊபர்

ஊபர் ஓட்டுநராக அதிக சம்பாத்தியத்திற்கான பில்லின் ரகசியம்: 

குறிப்பிட்ட இடம் மற்றும் நேரங்களில் ஊபருக்கான தேவை அதிகம் இருக்கும் போது 'Surge Fee'யை அந்நிறுவனம் வசூலிக்கும். அது பெரும்பாலும், ஓட்டுநர்களையே சேரும். பில், இரவு 10 முதல் அதிகாலை 2.30 மணி வரை முக்கியமான ரயில்வே மற்றும் விமான நிலையங்களுக்கு சென்று விடுவதாகத் தெரிவித்திருக்கிறார். பயணிகள் கூட்டம் அதிகமாகி சர்ஜ் கட்டணம் உயரும் போது மட்டுமே தான் ரைடுகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், ஒரு வழிப் பயணத்தை தான் முற்றிலும் தவிர்த்து விடுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதிகளவிலான ரைடுகளை கேன்சல் செய்யும் ஓட்டுநர்களுக்கு சில சலுகைகளை ஊபர் வழங்காது. ஆனால், தான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே கார் ஓட்டுகிறேன், பணம் இரண்டாம் பட்சம் தான் என தன்னுடைய அணுகுமுறை குறித்து தெரிவித்திருக்கிறார் அவர்.