
'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் போரினால் மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ரஷ்யா, வருக்காலத்தில் ஆசிய நாடுகள் மீது அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார். புகழ்பெற்ற ஹட்சன் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் களஞ்சியத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது, உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
டக்ஜ்வ்க்ப்
இந்திய-அமெரிக்க உறவு குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
"கடந்த 70 ஆண்டுகளில் ஒவ்வொரு பெரிய நாடுடனான உறவும் பெரும் ஏற்ற இறக்கத்தைக் கண்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு பெரும்பாலும் நிலையானதாகவே இருந்தது" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "இந்தியா-ரஷ்யா மிகவும் விதிவிலக்கானவை. அந்த நாடுகளின் உறவுகள் மிகவும் நிலையானது. அந்த உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலையான உறவு உள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேலும், இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து பேசிய அவர், "தேசிய பாதுகாப்பு தரப்பில் இரு நாடுகளும் அதிக இருதரப்பு ஒத்துழைப்பை வழங்க மிகவும் ஆர்வமாக உள்ளன. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழக்கு நமது கையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.