68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி
புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனின் பிளாக் பெடோரா(Black Fedora) ரக தொப்பி 77,640 யூரோவிற்கு ஏலம் போயுள்ளது. மைக்கேல் ஜாக்சன் தன் தனித்துவமான(சிக்னேச்சர்) நடனமான மூன் வாக்கை முதன்முதலில் ஆடும் போது இந்த தொப்பியை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடந்த ஏலத்தில் இந்த தொப்பி 60,000 முதல் 1,00,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்து தொப்பி 77,640 யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 68 லட்சம் ஆகும். இருப்பினும் அந்த ஏலத்தில் அதிகபட்ச தொகை ப்ளூஸ் இசைக்கலைஞரான போன் வாக்கரின்(T-Bone walker)கிட்டாருக்கு கிடைத்தது. அது 129,400 யூரோகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் சுமார் 1.13 கோடியாகும்.