அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம்
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியினை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதனால் அமெரிக்கா தயாரிப்புகளான பருப்பு, கொண்டக்கடலை, ஆப்பிள், போன்ற 6க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரியினை விதித்தது. இதனிடையே தற்போது இந்த இருநாடுகள் மத்தியில் விண்வெளி போன்ற பல்வேறு துறைகளில் இணக்கம் ஏற்பட ஏதுவாக விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 10% முதல் 20% வரையிலான கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இருதரப்பின் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டினை விட உயர்வு
முன்னதாக, பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா சென்றப்பொழுது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே உலர்ந்த பாதாம் பருப்பு (1கி.,ரூ.7), பாதாம் பருப்பு (1கி.,ரூ.7), ஆப்பிள் (20%), பருப்பு (20%), கொண்டைக்கடலை (10%), வால்நட் (20%)உள்ளிட்டவைகள் மீதான கூடுதல் வரியினை நீக்கப்போவதாக முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா இருக்கும் பட்சத்தில், 2021-22ம் ஆண்டில் இருதரப்பின் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டின் 11,950 கோடி மதிப்பிலான டாலரில் இருந்து 12,880 கோடி டாலராக உயர்ந்துள்ளது. டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாடு நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(செப்.,8) இந்தியாவிற்கு வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.