01 Sep 2024

புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபட... இதையெல்லாம் செய்யாதீங்க

பொதுவாக, புற்றுநோய் உலகளவில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூல்; மத்திய அரசு தகவல்

இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 10% அதிகரித்து சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகஸ்ட் 2024 இல் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா; போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கம் கூலி திரைப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக அறிவித்துள்ளார்.

வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால், இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி; நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

வேட்டையன் திரைப்படத்திற்காக தனது கங்குவா திரைப்படத்தை ஒத்திவைக்கும் முடிவிற்காக நடிகர் சூர்யாவிற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் சவுரவ் கங்குலி; ஃபார்முலா 4 போட்டியைக் காண வருகை

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்னை வந்துள்ளார்.

8 பேர் பலி; 200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய பசுமை ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரோலைசர் ஜிகாபேக்டரியை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலியுடன் தனது உறவு மற்றும் நட்பு குறித்து மனந்திறந்து பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் மூன்று நாட்கள் அமெரிக்க பயணம்

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் 10 வரை அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (செப்டம்பர் 2) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை; வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை

ஜோ ரூட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தனது 34வது டெஸ்ட் சதத்தை அடித்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது.

தி கோட் படத்தில் மேலும் 2 பாடல்கள், அதில் ஒன்று... சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு

நடிகர் விஜயின் தி கோட் படத்தின் மேலும் இரண்டு பாடல்கள் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு 

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கங்குவா ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு; நடிகர் சூர்யா அறிவிப்பு

ரஜினிகாந்தின் வேட்டையனுக்கு போட்டியாக கங்குவா களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.

31 Aug 2024

சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்

பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

தி கோட் பட டிக்கெட் முன்பதிவு; விஜய் மக்கள் இயக்க தலைமை அதிரடி உத்தரவு

நடிகர் விஜயின் தி கோட் பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது.

கூலி படத்தில் நடிகர் சத்யராஜ்; போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

நடிகர் சத்யராஜின் முதல் அதிகாரப்பூர்வ கேரக்டர் போஸ்டரை 'கூலி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டார்.

ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.

பொருளாதார காரணங்களால் 27 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டது ஆனந்த்டெக் பத்திரிகை

1997 ஆம் ஆண்டு முதல் கணினி வன்பொருள் பற்றிய விரிவான பகுப்பாய்விற்கு அறியப்பட்ட ஒரு முக்கிய தொழில்நுட்ப மறுஆய்வு இணையதளமான ஆனந்த்டெக் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு

வெள்ளியன்று (ஆகஸ்ட் 30) அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுனில் டொனால்ட் டிரம்ப் பேரணியில் ஒரு நபர் ஒரு தடையை மீறி மீடியா ரைசர் மீது ஏறியதற்காக கைது செய்யப்பட்டார்.

#MeToo விவாகரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; மோகன்லால் உறுதி

மலையாளத் திரையுலகம் #MeToo குற்றச்சாட்டுகளில் திணறி வரும் நிலையில், அம்மாவின் (மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்) தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மோகன்லால் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.

இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர்கோவிலுடன் இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக லைகா புரடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

தி கோட் படத்திற்கு முதலில் வைத்த பெயர் காந்தி; வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

யுஎஸ் ஓபன் 2024: 18 ஆண்டுகளில் முதல்முறையாக நான்காவது சுற்றை எட்டாமல் வெளியேறிய நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச் 28ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்த பின்னர், 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக யுஎஸ் ஓபன் நான்காவது சுற்றை எட்டத் தவறினார்.

தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்

நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஹர்திக் பாண்டியா முதல் விஜய் வரை; பிரபலங்கள் விரும்பும் லெக்ஸஸ் எல்எம் 350எச் காரில் அப்படி என்ன இருக்கு?

இந்தியாவில் சமீபகாலமா எஸ்யூவிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றின் லுக், விசாலமான அறைகள் மற்றும் வசதி ஆகியவை இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.

ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது.

எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி

பிரேசிலில் உள்ள ஒரு சட்டப் பிரதிநிதியை பணியமர்த்த எக்ஸ் நிறுவனத்திற்கு விதித்த காலக்கெடு முடிவடைந்தும் பணியமர்த்தாததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்தார்.

3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

காலையில் எழுந்திருக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கா? நீரிழிவு நோயாகக் கூட இருக்கலாம்.. அலெர்ட் மக்களே

சைலன்ட் கில்லர் என அழைக்கப்படும் நீரிழிவு நோய் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, இன்சுலின் பற்றாக்குறையால் உருவாகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்; பிரதான வேட்பாளர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ​​இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.