
தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.
முத்துகண்ணன் (21), விஜய் (25) ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், செல்வம் (21), பிரசாந்த் (20), செந்தூர்கனி (45), முத்துமாரி (41) ஆகியோர் பலத்த காயமடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக முதல்வர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவு
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/bvfVJAMWw1
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 31, 2024