தி கோட் படத்திற்கு முதலில் வைத்த பெயர் காந்தி; வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கும் நிலையில், மூத்த நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்திற்கான புரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
காந்தி பெயரால் சர்ச்சை
சமீபத்தில் கலாட்டா சேனலுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், படத்திற்கு முதலில் காந்தி என பெயர் வைக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறினார். எனினும், அந்த தலைப்பே கிடைக்காது எனத் தெரிந்ததால், காந்தி இந்தியாவின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The GOAT) என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நிலையில், நடுத்தர வயது கதாப்பாத்திரத்திற்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் காந்தி கேரக்டர் குடிப்பதுபோல் இருந்த நிலையில், அதுகுறித்து முன்னர் சர்ச்சை கிளம்பியது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, காந்தி என்ற பெயர் வைத்தாலே சரக்கடிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியதோடு, இதன் பின்னால் எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை எனக் கூறினார்.