
இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
2 மில்லியன் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் அளிக்கும் வகையில், மாநில அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான கைடன்ஸில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகம் தொழில்நுட்பத்தில் புதிய யுகத்தை நோக்கி பயணித்து வருவதாக அமைச்சர் டிஆர்பி ராஜா மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தங்கள்
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் போது நோக்கியா உள்ளிட்ட பல முதலீட்டாளர்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தங்களின்படி, நோக்கியா தமிழ்நாட்டில் ₹450 கோடி செலவில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவி, 100 வேலைகளை உருவாக்கும்.
பேபால் சென்னையில் ஒரு மேம்பட்ட மேம்பாட்டு மையத்தை நிறுவி, 1,000 வேலைகளை உருவாக்கும். மைக்ரோசிப் நிறுவனம் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்திற்கான புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சென்னை செம்மஞ்சேரியில் ₹250 கோடி செலவில் நிறுவி 1,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
யீல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம், செமிகண்டக்டர் உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதியை கோயம்புத்தூர் சூலூரில் ₹150 கோடி செலவில் நிறுவி, 300 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்
— TN DIPR (@TNDIPRNEWS) August 31, 2024
தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AI ஆய்வகங்கள் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம்.#CMMKSTALIN | #TNDIPR | #CMStalinInUS |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TRBRajaa@Guidance_TN @Google pic.twitter.com/Xwr6JB8Y2V