
கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா; போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கம் கூலி திரைப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக அறிவித்துள்ளார்.
உபேந்திரா படத்தில் காலீஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அது குறித்த போஸ்டர் ஒன்றையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ள நிலையில், அவர்களின் கதாப்பாத்திர அறிமுகத்தை கடந்த ஒரு வாரமாக படக்குழு செய்து வருகிறது.
இதன்படி, சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
லோகேஷ் கனகராஜ் எக்ஸ் பதிவு
Kicked to have @nimmaupendra sir joining the cast of #Coolie as #Kaleesha💥💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 1, 2024
Welcome on board sir🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/qGpM48ihvm
15 வருட இடைவெளி
15 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் உபேந்திரா
ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளும் உபேந்திரா, சமீபத்தில் அவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, கூலி படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட திரையுலகில் இருந்து ஒரு நட்சத்திரத்தை லோகேஷ் பரிசீலிப்பதாக ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது உபேந்திரா அதில் இடம்பெறும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமான வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், 15 வருட இடைவெளிக்குப் பிறகு கூலி படத்தின் மூலம் உபேந்திரா மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
முன்னதாக, 2008இல் வெளிவந்த சத்யம் திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.