ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு
பிசிசிஐ சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுடன் மோதும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்தது. இரு நாட்டு 19 வயதுக்குட்டோருக்கான அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. செப்டம்பர் 21இல் தொடங்கும் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியிலும், டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 18 வயதான சமித் சமீபத்தில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக மஹாராஜா டி20 டிராபியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் லீக்கில் 7 இன்னிங்ஸ்களில் சராசரியாக 11.71 மற்றும் 113.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 82 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்திய யு19 அணி வீரர்களின் பட்டியல்
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய யு-19 அணி: ருத்ரா படேல், சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் ஷர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத், முகமது எனான். நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய யு-19 அணி: வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா, சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேயா கேபி, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங் பங்கலியா, சேத்தன் ஷர்மா, சமர்த் என், ஆதித்யா ராவத், நிகில் குமார், அன்மோல்ஜீத் சிங், ஆதித்யா சிங், முகமது எனான்.