#MeToo விவாகரத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; மோகன்லால் உறுதி
மலையாளத் திரையுலகம் #MeToo குற்றச்சாட்டுகளில் திணறி வரும் நிலையில், அம்மாவின் (மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம்) தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, மோகன்லால் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். இந்த குற்றச்சாட்டில் பலர் சிக்கி இருந்தாலும், பொதுவாக எல்லோரையும் குறை கூற முடியாது என்று அவர் பிரச்சினை கருத்து தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டபோது இதைக் கூறினார். அனைவரையும் குறை கூற முடியாது எனக் கூறினாலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினார். மேலும், அம்மாவின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால்
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருவதாகக் கூறிய மோகன்லால், தான் அந்த அறிக்கையை இன்னும் படிக்கவில்லை என்றாலும், ஹேமா கமிட்டி அறிக்கையை மலையாள சினிமா துறை வரவேற்பதாகக் கூறினார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவர் மேலும், "விசாரணைச் செயல்பாட்டில் நாங்கள் ஒத்துழைப்போம். விஷயங்களைச் சரிசெய்வதற்காக மட்டுமே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அத்தகைய அதிகாரக் குழு பற்றி எனக்குத் தெரியாது. நான் அதில் ஒரு அங்கம் இல்லை." என்றார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மோகன்லால் தலைமையிலான ஒட்டுமொத்த அம்மா நிர்வாகக் குழுவும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.