தி கோட் திரைப்படத்தில் அஜித்; வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜயை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே, இப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தி கோட்டில் நடிகர் அஜித் தொடர்பான குறிப்பு பற்றி வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தது அனைத்து ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலாட்டா பிளஸ் உடனான ஒரு நேர்காணலில் பேசுகையில், தனது மங்காத்தா திரைப்படத்தில் விஜயின் படத்தைப் பற்றி ஒரு பெரிய குறிப்பைக் கொண்டிருப்பது போல, தி கோட் படத்தில் அஜித்குமாரைப் பற்றிய குறிப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.
தகவல்
அஜித் குறிப்பு குறித்து வெங்கட் பிரபு கூறியதன் முழு விபரம்
வெங்கட் பிரபு இதுகுறித்து கூறுகையில், "தி கோட் திரைப்படத்தில் எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த தருணமாக அஜித் குமாரின் தருணம் இருக்கும். அது குரல்வழியாகவோ, ஷாட் ஆகவோ அல்லது குறிப்புகளாகவோ இருக்கலாம், அதை என்னால் இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது" என்றார்.
அதுமட்டுமல்லாமல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லியில் ஒரு உரையாடல் வடிவில் விஜயின் குறிப்பு இருக்கும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
தி கோட் திரைப்படம் அறிவியல் புனைகதை ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள நிலையில், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
வெங்கட் பிரபு தகவல்
Ajith reference in Goat 💯✅ -Vp#TheGOAT#AjithKumarpic.twitter.com/3AOYeCeehA
— MuTHU Movie updates (@Muthupalani_) August 31, 2024