NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்
    வேட்டையன் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த்

    'குறி வச்சா இரை விழணும்'; வேட்டையன் பட டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 31, 2024
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக லைகா புரடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

    ஜெய் பீம் படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை லைகா புரடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

    இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் அக்டோபர் 10 அன்று திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதையொட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    டப்பிங்

    படத்திற்கான டப்பிங் பணிகள் மும்முரம்

    படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் ஏற்கனவே டப்பிங் பணிகளை முடித்துள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

    இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் டப்பிங்கில் ஈடுபடும் காட்சிகளை ஒரு காணொளியாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த காணொளியில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேலை குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக பாராட்டுவதுபோல் இருப்பதோடு, இறுதியில், 'குறி வச்சா இரை விழணும்' என ரஜினிகாந்த் கூறி முடிப்பதுபோல் உள்ளது.

    இதற்கிடையே, ரஜினிகாந்தின் வேட்டையன் வெளியாகும் அதே அக்டோபர் 10 அன்று நடிகர் சூர்யாவின் கங்குவா படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    லைகா புரடக்ஷன்ஸ் எக்ஸ் பதிவு

    Kuri Vechha… Erai Vizhanum. 🦅 Superstar @rajinikanth at the dubbing session. 🎙️ Watchout VETTAIYAN 🕶️ is on the way. 🔥

    Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/BUDMuC5jeq

    — Lyca Productions (@LycaProductions) August 31, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    லைகா
    லைகா
    சினிமா

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    ரஜினிகாந்த்

    இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல் இளையராஜா
    சங்கியாக இருந்திருந்தால் ரஜினிகாந்த் 'லால் சலாமில்' நடித்திருக்க மாட்டார்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  பொழுதுபோக்கு
    சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்? தமிழ் சினிமா
    வைரலாகும் ரஜினியின் 'லால் சலாம்' பட ட்ரைலர்  பொழுதுபோக்கு

    லைகா

    'தலைவர் 171': ரஜினியின் கடைசி படம் இதுவா? மிஷ்கினின் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்  ரஜினிகாந்த்
    ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு  ரஜினிகாந்த்
    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170' திரைப்பட அப்டேட்  ரஜினிகாந்த்
    நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கும் லைகா  விஜய்

    லைகா

    'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்  விஷால்
    விடாமுயற்சி: அஜித்குமாருக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம் நடிகர் அஜித்
    தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அயலக திரையரங்க உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம் திரைப்படம்
    அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு நடிகர் அஜித்

    சினிமா

    "Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி
    விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய ராஷ்மிகா  பொழுதுபோக்கு
    கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி திரைப்பட துவக்கம்
    அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்  திருமணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025