Loading...
நவம்பர் 7 முதல் செபியின் புதிய விதிகள்; பங்குச் சந்தை வழக்கிற்கு ஆன்லைனில் தீர்வு; முழு விபரம்
நவம்பர் 7 முதல் செபியின் புதிய விதிகள் அமலானது

நவம்பர் 7 முதல் செபியின் புதிய விதிகள்; பங்குச் சந்தை வழக்கிற்கு ஆன்லைனில் தீர்வு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
09:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, தனது நிர்வாக மற்றும் சிவில் நடைமுறைகளுக்கான புதிய தீர்வு விதிகளை (Settlement Regulations, 2026) நவம்பர் 7 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டின் பழைய விதிகளுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டக் கட்டமைப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்த்துக்கொள்ள வழிவகுக்கிறது. இதற்காக செபி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரத்யேக ஆன்லைன் விண்ணப்ப வசதி மற்றும் கணக்கீட்டு மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டணங்கள்

விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச தீர்வுத் தொகை விவரங்கள்

புதிய விதிகளின்படி, திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணமாகத் தனிநபர்களுக்கு ₹25,000 மற்றும் நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளுக்கு ₹35,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, முதல் முறை விண்ணப்பிப்போருக்குக் குறைந்தபட்ச தீர்வுத் தொகையாக ₹3 லட்சமும், பிற விண்ணப்பதாரர்களுக்கு ₹7 லட்சமும் வரம்பாக வைக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்வுத் தொகையானது வழக்கின் தீவிரத்தன்மை, விதிமீறல்களின் அளவு மற்றும் எந்தக் கட்டத்தில் விண்ணப்பம் செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே பிரத்யேக சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடப்படும்.

காலக்கெடு நீட்டிப்பு

நீட்டிக்கப்பட்ட 90 நாட்கள் காலக்கெடு மற்றும் ஃபாஸ்ட்-ட்ராக் வசதிகள்

காரண விளக்க நோட்டீஸ் (Show-Cause Notice) வழங்கப்பட்ட வழக்குகளில், தீர்வு கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முந்தைய 60 நாட்களிலிருந்து தற்சமயம் 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கு முன்பாகவே நிறுவனங்கள் தானாக முன்வந்து தீர்வு கோர 60 நாட்கள் அவகாசத்துடன் கூடிய 'முன்-நோட்டீஸ்' வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்திற்குள் தீர்வுத் தொகை அடங்கும் சிறிய வழக்குகளை உயர்நிலைக் குழுவின் தாமதமின்றி விரைவாக முடிக்கப் பிரத்யேக 'ஃபாஸ்ட்-ட்ராக்' வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பழைய வழக்குகள்

தகவல் தருவோருக்கான ரகசியக் காப்பு மற்றும் பழைய வழக்குகளுக்கான வாய்ப்பு

சந்தை மீறல்கள் குறித்து செபிக்கு விசாரணை ரீதியாகப் பெரிதும் உதவும் நபர்களுக்குத் தண்டனைக் குறைப்பு மற்றும் 90% வரை கட்டணத் தள்ளுபடி வழங்கும் 'இரகசியப் பாதுகாப்பு' (Confidentiality) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், பழைய விதிகளின் கீழ் நிலுவையில் உள்ள அல்லது நிராகரிக்கப்பட்ட வழக்குகளுக்கு 20% கூடுதல் கட்டணத்துடன் விண்ணப்பிக்க 90 நாட்கள் வரை ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய சீர்திருத்தங்கள் மூலம் பங்குச் சந்தை சார்ந்த சட்டச் சிக்கல்கள் அனைத்தும் விரைவாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT