'மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருகிட்ட'; தி கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியானது
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடல் 'மட்ட' என்ற பெயரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லியோ படத்திற்கு பிறகு நடித்துள்ள நடிகர் விஜயின் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் நடித்துள்ள நிலையில், படம் செப்டம்பர் 5 அன்று திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியானதோடு, படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், மட்ட என்ற பெயரிலான நான்காவது பாடல் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை வெளியாகியுள்ளது.