Page Loader
தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை; வானிலை முன்னறிவிப்பு
வானிலை முன்னறிவிப்பு

தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை; வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2024
01:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், சில இடங்களில் சாலைகள் வழுக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படலாம். தளர்வான/பாதுகாப்பற்ற உட்கட்டமைப்புகளால் சிறிய அளவிலான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது." எனத் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரைக்குமான வானிலை அறிக்கையாக இது வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

வானிலை அறிக்கை