காலையில் எழுந்திருக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கா? நீரிழிவு நோயாகக் கூட இருக்கலாம்.. அலெர்ட் மக்களே
சைலன்ட் கில்லர் என அழைக்கப்படும் நீரிழிவு நோய் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, இன்சுலின் பற்றாக்குறையால் உருவாகிறது. இது படிப்படியாக நம் உடலின் மற்ற பகுதிகளையும் பாதிப்பதால் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் சர்க்கரை நோய் வயதனாவர்களுக்கே அதிகம் வரும், ஆனால் இப்போது குழந்தைகள் கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 40 வயதிற்குப் பிறகு, பலரும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பல நேரங்களில் மக்கள் நீண்ட காலமாக நீரிழிவு அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இது ஆபத்தாக முடியும். சர்க்கரை நோய்க்கு காலையில் எழுந்தவுடன் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீரிழிவு நோய்க்கான காரணங்கள்
நோய்த்தொற்றுக்கு எதிரான உடலின் பாதுகாப்பு அமைப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு, இன்சுலின் உற்பத்தி செய்யும் கணைய பீட்டா செல்களை குறிவைத்து அழித்து விடுகிறது. இதன் விளைவாக டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வகையான டைப் 2, மரபணுக்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் உட்பட பல்வேறு காரணங்களால் வருகிறது. நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:- வறண்ட வாய் மற்றும் தாகம் : காலையில் எழுந்திருக்கும்போது உங்கள் வாய் வறண்டு, உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால், இது இரத்த சர்க்கரை அதிகரித்ததற்கான அறிகுறியாக இருக்கலாம். சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளியின் தொண்டை காலையில் வறண்டு போகும்.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்
மங்கலான பார்வை : சில சமயங்களில் காலையில் பார்வை மங்கலாகிவிடும். உங்களுக்கும் இப்படித் தோன்றினால், அது இரத்தச் சர்க்கரைக் குறைவு காரணமாகவும் இருக்கலாம். சோர்வாக உணர்தல் : இரவு முழுவதும் தூங்கிய பிறகு நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், உங்கள் இரத்த சர்க்கரையை ஒருமுறை சரிபார்க்கவும். உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது சோர்வு மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. கை நடுக்கம் : பல நேரங்களில் மக்களின் கைகள் நடுங்கத் தொடங்கும். சர்க்கரையின் அளவு 4 மில்லிமோலுக்குக் கீழே குறையும் போது, பசி, கை நடுக்கம், அதிக வியர்வை போன்ற பல அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களும் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிக்கவும்.