
சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்
செய்தி முன்னோட்டம்
பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடனப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.
இது போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், முன்னதாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தைத் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சில நிபந்தனைகளை விதித்தது.
அதில், கார் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஆட்டோமொபைல் (எஃப்ஐஏ) அமைப்பிடம் சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் சான்று பெற வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டிருந்தது.
எஃப்ஐஏ சான்று
சான்றிதழ் வழங்கியது எஃப்ஐஏ
இந்நிலையில், எஃப்ஐஏ சான்றித பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் போட்டியை நடத்தும் ரேஸிங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து எஃப்ஐஏ ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான அனுமதியை மாலை வழங்கியது.
இதையடுத்து சென்னை தீவுத் திடலில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு 7 மணிக்கு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
7 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடக்க உள்ளது. இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரத்தோடு கார் பந்தயம் நடந்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
போட்டியைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
#BREAKING | தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் தொடங்கியது!#SunNews | #FormulaRacing | #Formula4Chennai pic.twitter.com/aeJuFZI0yZ
— Sun News (@sunnewstamil) August 31, 2024