Page Loader
தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு
சுங்கச் சாவடி கட்டண உயர்வு

தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் அமலானது கட்டண உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2024
12:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது. வழக்கமாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் கடந்த ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் ஐந்து சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அடுத்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

5 முதல் 7 சதவீதம்

25 சுங்கச் சாவடிகள்

கடந்த ஜூனில் அமலான முதல் கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த வாரம் செப்டம்பர் 1 முதல் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும், இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகளுக்கு ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் செலவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர், சமயபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, 2023-24 நிதியாண்டில் தமிழகம் சுங்கச் சாவடி கட்டண வசூலில் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.