சென்னையில் சவுரவ் கங்குலி; ஃபார்முலா 4 போட்டியைக் காண வருகை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்னை வந்துள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) ஆகிய இரண்டு நாட்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகிறது.
இந்த போட்டிக்கு பல்வேறு தடைகள் வந்த நிலையில், இறுதியாக சனிக்கிழமை இரவு போட்டி தொடங்கி பல்வேறு பிரிவுகளில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதிப் போட்டிகள் நடைபெறும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சவுரவ் அங்குலி போட்டியைக் காண வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
சவுரவ் கங்குலி பேட்டி
#Watch | ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காண சென்னை வந்தார் சவுரவ் கங்குலி!#SunNews | #ChennaiFormula4 | #Formula4 | #SouravGanguly pic.twitter.com/o6ZUSlbl1k
— Sun News (@sunnewstamil) September 1, 2024