Page Loader
ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி
பிராட்வே பேருந்து முனையம்

ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2024
05:38 pm

செய்தி முன்னோட்டம்

பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது. புதிய திட்டத்தின்படி, 10 மாடிகள் கொண்ட புதிய வசதி, 1,100 பேருந்துகள் இயங்கும் பேருந்து நிலையம், கிட்டத்தட்ட 500 கார்கள் மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் ஒரு வணிக வளாகம் ஆகியவை ரூ.823 கோடியில் கட்டப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்த திருத்தப்பட்ட திட்டத்தின்படி, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்துக்குச் சொந்தமான குறளகம் கட்டிடம், திட்டத்தின் ஆலோசகராக உள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் முன்மொழிந்துள்ள மல்டிமாடல் வசதி வளாகத்தின் (எம்எம்எப்சி) ஒரு பகுதியாக மாற்றப்படும்.

சிஎம்ஏஎம்எல்

சிஎம்ஏஎம்எல் எனும் சிறப்பு அமைப்பை உருவாக்க முடிவு

இத்திட்டத்தை செயல்படுத்தவும், பராமரிக்கவும் சென்னை மெட்ரோ அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் (சிஎம்ஏஎம்எல்) என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற முன்மொழியப்பட்ட வசதிகளில், மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதி, மெட்ரோ ரயில் உடனான இணைப்பு கோட்டை புறநகர் ரயில் நிலையத்துடன் இணைப்பு போன்றவை அடங்கும். இத்திட்டத்திற்கு தேவையான ரூ.822.70 கோடியில், தமிழக அரசு வைபிலிட்டி கேப் நிதியாக ரூ.200.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் 115.03 கோடி ரூபாயை கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனுக்கு 10 ஆண்டு கால அவகாசத்துடன் கடனாக வழங்கும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 506.83 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு கடனாக வழங்கும்.