கோலிவுட்: செய்தி

சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள்

'சிறுத்தை' படத்தில், கார்த்தியின் குழந்தையாக நடித்த குட்டி பாப்பாவை நினைவிருக்கிறதா? அந்த சுட்டி பாப்பாவின் பெயர் ரக்ஷனா.

80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல்

1981-இல் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியான 'தில்லு முள்ளு' படத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

'ஹாப்பி பர்த்டே செல்லம்': இன்று நடிகர் பிரகாஷ்ராஜின் பிறந்தநாள்

இந்தியா சினிமாவே கொண்டாடும் நடிகர் பிரகாஷ்ராஜ் எனக்கூறலாம். வில்லன் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரகாஷ்ராஜ், தன்னுடைய நடிப்பு திறமையை மெருகேற்றி, குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும், சில நேரங்களின் காமெடியிலும் கலக்கி வருகிறார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ

'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் 'விடுதலை' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.

நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு

கோலிவுட்டில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'பத்து தல' படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபேலி என்.கிருஷ்ணா இயக்கி வருகிறார்.

தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ்

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான, நடிகர் மனோஜ் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'மனோஜ் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை நடத்தி வந்தார்.

லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல்

பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ, லண்டன் நகரம் அருகே இருக்கும் லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று சுயநினைவின்றி காணப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல்

கேரளாவில் இருந்து வரும் ஹீரோயின்களுக்கு, தமிழ் ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு மௌசு உண்டு.

கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதியை புகழ்ந்த நடிகை ராதா

80-களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை ராதா. பாரதி ராஜாவின் அறிமுகம் நடிகை ராதா.

யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 2021-ஆம் ஆண்டு, நடிகை யாஷிகா, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உற்பட்ட ECR-ல், இரவுநேர பார்ட்டி முடித்து விட்டு, திரும்பியபோது, மிக பெரிய விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

23 Mar 2023

அனிருத்

NTR 30: RRR பட நாயகனான Jr .NTR உடன் இணையும் அனிருத்

RRR படத்தின் வெற்றிக்கு பிறகு, Jr.NTR நடிக்கும் அடுத்த படம், NTR-30 எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இளம் நடிகருடன் திருமணமா? மனம் திறந்த நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், சென்ற ஆண்டு எதிர்பாராதவிதமாக இறந்து போனார். அவரது திடீர் மரணம், மீனாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவில் முதல்முறையாக 'Music Entrepreneurship' துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி

நேற்று 'வேல்ஸ்' நிறுவனத்தின் IPO விழா நடைபெற்றது. அதில் பங்குகொண்ட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் செந்திலின் 72 வது பிறந்தநாள் இன்று

1951 -இல் ராமநாதபுரம் மாவட்டத்தில், முனுசாமியாக பிறந்தவர் தான் நடிகர் செந்தில். 'அப்பாவின் திட்டுக்கும், அடிக்கும் பயந்து, ஊரை விட்டு ஓடி வந்தேன்' என அவர் பேட்டிகளில் கூறியுள்ளார்.

பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது

நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். வீரமங்கையாக அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை

பழம்பெரும் பாடகரான டி.எம்.சவுந்தர ராஜனுக்கு இந்த ஆண்டு 100-வது பிறந்தநாள். வரும் 24-ஆம் தேதி, அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்களும், திரை துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், அவரை கௌரவிக்கும் விதமாக, அன்னாரின் வீடு அமைந்திருந்த மந்தைவெளி, மேற்கு வட்ட சாலை (west circular road)-ஐ, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

பார்வதி நாயர் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை: பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்

சமீபத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து, பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம், அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

'அட..!' சொல்ல வைக்கும் 'பொல்லாதவன்' நடிகர் கிஷோரின் புதிய தொழில்

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து இருந்தாலும், தமிழக மக்களுக்கு பரிச்சையமானவர் நடிகர் கிஷோர்.

பர்த்டே ஸ்பெஷல்: நடிகை ஷோபனாவின் 53 -வது பிறந்த நாள் இன்று

'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்று அழைக்கப்படும், பழம்பெரும் நடிகைகளான 'லலிதா-பத்மினி-ராகினி' ஆகியோரின் சகோதரர் மகள் தான் நடிகை ஷோபனா.

கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள்

சமீபத்தில் சோஷியல் மீடியாவிற்கு என்ட்ரி ஆன நடிகை ஷாலினி, அவ்வப்போது, தனது குடும்பத்தினர் புகைப்படங்களை பகிர்வதுண்டு. அதில், அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியானால், தல ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் டும்டும்டும்; மணப்பெண்ணை பற்றி வெளியான புது தகவல்

தற்போது கோலிவுட்டில் இருக்கும் இளம் கதாநாயகர்களில், அசோக் செல்வனும் ஒருவர்.

டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்!

'அமரர்' கல்கியின் சரித்திர புனைவான 'பொன்னியின் செல்வனை' படமாக எடுத்தவர் மணிரத்னம். முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியானதை அடுத்து, படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாத இறுதியில் வெளிவரவிருக்கிறது.

அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், விருமான் படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் என அறிந்திருப்பீர்கள்.

'பீட்சா' முதல் 'மஹான்' வரை: வித்தியாசமான கதைக்களம் மூலம் வசீகரித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் இன்று

குறும்படங்கள் மூலம், வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த முன்னோடிகளில் ஒருவர் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை கூறலாம். டிஜிட்டல் யுகத்தில், யூட்யூபும், குறும்படங்களும் அப்போது தான் அறிமுகம் ஆகி வருகிறது. அந்த காலத்திலேயே, சிறிய பட்ஜெட்டில், அழகிய குறும்படம் ஒன்றை இயக்கி, 'நாளைய இயக்குனர்' என்ற விருதை வென்ற நம்பிக்கையில், வெள்ளிதிரையில் கால் பதித்து, தற்போது, இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டிருக்கும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்த நாள் இன்று.

கார்த்தியிலிருந்து வந்தியத்தேவனாக உருமாறியது எப்படி? மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்', இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.

ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால்... விக்னேஷ் சிவன் வரிகள் உண்மையாகுமா?

'விக்னேஷ் சிவன்-அஜித் குமார் இணையும்...AK62' என இயக்குனர் விக்னேஷ் சிவன், சென்ற ஆண்டு, இதே நாளில் அறிவித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்!

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாகத்திற்கான அப்டேட் நேற்று,(மார்ச்-17) மாலை வெளியானது. அதன்படி, அடுத்த வாரம், (மார்ச்-20) படத்தின் முதல் பாடலான 'அகநக' வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, சினிமாவில் நடிக்க போகிறாரா? RK செல்வமணி தகவல்

நடிகையும், தற்போதைய ஆந்திரபிரதேசத்தின் மந்திரியுமான ரோஜா மற்றும் FEFSI தலைவரும், இயக்குனருமான RK செல்வமணி தம்பதியினரின் மகள், அன்ஷுமாலிகா. இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. அச்சுஅசல், சிறுவயது ரோஜாவை போன்றே இருக்கும் அன்ஷு மாலிகாவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் எனவும் செய்திகள் வருவதுண்டு.

மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் 60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா?

தமிழ் படங்களுக்கு, இந்தியா தாண்டி, ரசிகர்கள் ஏராளம் இருக்கும் நாடு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் தான் என கூறும் அளவிற்கு, அங்கு நம்மூர் படங்களுக்கும் நடிகர்களுக்கும் வரவேற்பும் அதிகம்.

17 Mar 2023

ஓடிடி

'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது

ஜெயம் ரவி நடிப்பில் சென்ற வாரம் வெளியான படம் தான் 'அகிலன்'. இந்த படத்தை, என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியுடன் இணைந்து 'பூலோகம்' என்ற படத்தை தந்திருந்தார்.

"வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை

கேப்டன் விஜயகாந்த், அவர் பெயருக்கு ஏற்றார் போலவே கோலிவுட்டின் கேப்டனாக கோலோச்சியவர்.

அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம்

உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பேரனாக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

சிம்ரன் 50: முதல் முறையாக இந்த நடிகருடன் இணைகிறார்!

நடிகை சிம்ரனுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன், தற்போது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வெளியான கொஞ்ச நேரத்திலேயே லைக்குகளை அள்ளும் கஸ்டடி படத்தின் டீஸர்

பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது.

'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை

பிதாமகனின் தயாரிப்பாளரான VAதுரை, உடல்நலம் குன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதி உதவி செய்வதற்கு முன் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவருடன் தொலைபேசியில் பேசி, நம்பிக்கையூட்டினார் எனவும் கூறப்பட்டது.

16 Mar 2023

விக்ரம்

துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல்

விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட படம் 'துருவநட்சத்திரம்'. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் சீதாராமம் நடிகை மிருணாள் தாக்கூர்

'சீதாராமம்' படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகத்திற்கு பரிச்சயமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.

நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி

தென்னிந்தியாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தோன்றி இருந்தார்.

வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது

தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில் ஒருசேர தயாராகி இருக்கும் 'கஸ்டடி' திரைப்படம், மே 12 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா

நடிகை கங்கனா, தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.