LOADING...
கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதியை புகழ்ந்த நடிகை ராதா
மகள் கார்த்திகாவுடன் ராதா

கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதியை புகழ்ந்த நடிகை ராதா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2023
07:05 pm

செய்தி முன்னோட்டம்

80-களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை ராதா. பாரதி ராஜாவின் அறிமுகம் நடிகை ராதா. அப்போது, 'கிராமப்புற படங்களை மட்டுமே எடுக்கிறார் பாரதிராஜா' என்ற பேச்சு எழுந்தது. அதை உடைக்கும் முயற்சியாக, ஒரு நகர்ப்புற கிரைம் திரில்லர் படம் எடுத்த, அதில் வெற்றியும் பெற்றார். அந்த படம் தான் 'டிக்டிக்டிக்'. இந்த படத்தின், பாடல் காட்சியில் ஒன்றில், நடிகைகள் ராதா, ஸ்வப்னா மற்றும் மாதவி ஆகியோர், நடிகர் கமலுடன், நீச்சல் உடையில் ஓயாரமாக போஸ் தருவது போன்ற புகைப்படம் ஒன்றை, சமீபத்தில் ராதா பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில், மாதவி ஒய்யாரமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதை பாராட்டிய ராதா, சிறப்பு பாராட்டுகளை வாணி கணபதிக்கு தெரிவித்தார். இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வாணி கணபதிதான்.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்விம் சூட்டில் 80 'ஸ் ஹீரோயின்கள்