கோலிவுட்: செய்தி

நடிகர் சிம்பு படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல் நடிக்கப்போகிறாரா?

நடிகர் சிலம்பரசன்- இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இணையும் அடுத்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிக்கப்போவதாக சென்ற வாரம் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

கோவிலில் சிறப்பு பூஜை செய்த சமந்தா; ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் குழப்பம்

பிறப்பால் கிறிஸ்துவரான நடிகை சமந்தா, நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்த போது, இரு மதங்களையும் தழுவியே திருமண நிகழ்வு நடைபெற்றது. காலை ஹிந்து முறைப்படியும், மாலை, கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதன் பின்னர், இருவருக்கும் விவாகரத்தான பின்னர், தனது தோழியுடன், ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போதே பல ஊடகங்கள், சமந்தா ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என செய்திகள் வெளியிட்டன.

எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல்

இந்த வாரம், கிட்டத்தட்ட 5 படங்கள் ரசிகர்களுக்காக வெளிவர போகிறது. அதில் 3 படங்கள் வெள்ளித்திரையில் வெளிவரும் நேரத்தில், மற்ற 2 படங்கள், OTT தளத்தில் வெளிவர போகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

"உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா!" :மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம்

'இயக்குனர் இமயம்' என மரியாதையோடு அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடிகர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். அவர் படங்கள் இயக்கம் போதே, நடிகர்களுக்கு, காட்சி நடித்து காட்டி, இயக்குவார் என்று பரவலான பேச்சு உண்டு.

சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என அறிவிப்பு

சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'பத்து தல' திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

நயன்தாரா கூறியதன் பேரில், ரஜினி படத்திலிருந்து நீக்கப்பட்டாரா மம்தா மோகன்தாஸ்?

தமிழ் மொழியில், ஒன்றிரண்டு படங்களே நடித்திருந்தாலும், மலையாளத்தில் இன்றும் பிரபலமாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.

இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள்

திரையுலகில் சமீப காலங்களில் பல திறமையுள்ள நடிகர், நடிகைகள் நிறைய பேர் நடிக்க வருகின்றனர்.

'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள்

வாரந்தோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாக இருக்காது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வரும். அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதே அரிது. இதில் விளம்பரத்திற்கு எல்லாம் அந்த தயாரிப்பாளரால் செலவு செய்ய முடியாது. ஆனால் நல்ல படங்கள், விளம்பரமே இல்லையென்றாலும், தமிழ் ரசிகன், அதை தவற விடமாட்டான், என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள்.

'கைதி தொடங்கி லியோ வரை': LCU-வின் 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று!

கோலிவுடின் இன்றைய தலைமுறை இயக்குனர்களில், பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றி படங்களை தந்த இயக்குனரான லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் இன்று.

2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள்

இந்த 2023-ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகில் பல பிரமாண்ட படங்கள் வெளிவர காத்திருக்கிறது. அதே வேளையில், பல புதுப்படங்கள், எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் அறிவிக்கப்பட்டன. பின்னர், ஏனோ பல காரணங்களால், நிறைய மாற்றங்களை சந்தித்தது.

11 Mar 2023

விஜய்

காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ

விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக இணையும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

11 Mar 2023

சென்னை

சாலிகிராமத்தில் இயங்கி வந்த டப்பிங் யூனியன் பில்ட்டிங்கிற்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

சென்னை சாலிகிராமத்தில், நடிகர் ராதாரவி தலைமையில், தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் இயங்கி வந்தது.

நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் மார்ச் 26 -ஆம் தேதி,சென்னையில் பாராட்டு விழா

ரஜினிகாந்தின் ரசிகர்களை ஒன்றிணைத்து 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற பெயரில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்துள்ளனர்.

விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய படம்தான் 'திரிஷ்யம்'. அந்த படத்தின் வெற்றி, திரிஷ்யம் படத்தை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில், அதை ரீமேக் செய்யவைத்தது.

சிறு வயது கீர்த்தி சுரேஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின், அக்காவான ரேவதி சுரேஷின் பிறந்த நாள் இன்று. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கீர்த்தி சுரேஷ், அவருடன் சிறு வயது முதல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள்

கலை மற்றும் கலைஞர்களுக்கு, மொழி எல்லை என்பார்கள். அவர்கள் எந்த மொழி, எந்த நாட்டவரை சேர்ந்தவராக இருந்தாலும், ரசிகனுக்கு பிடித்தால், அந்த நடிகரை, 'நம்மூர்' காரனாகவே பாவிக்கும் எண்ணம், தமிழ்நாட்டின் ரசிகனுக்கு உண்டு.

MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'

நடிகை சாய் பல்லவி, சமீபத்தில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, தெலுங்கு டாக்-ஷோ ஒன்றில் பங்குபெற்றார்.

மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

வயது மூப்பின் காரணமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார், பழம்பெறும் நடிகை கே.ஆர்.விஜயா.

'ஒல்லி-பெல்லி' நடிகை இலியானாவிற்கு தடையா? வைரலாகும் புதிய தகவல்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், 'கேடி' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அந்த படத்தில் அவருடன் தமன்னாவும் நடித்திருந்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம்

நடிகர் அஜித்குமார், ராஜா என்ற படத்தில், நடிகை ஜோதிகாவுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார்.

அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள்

மலையாள படவுலகில் இருந்து வந்து, தமிழ் திரையுலகிற்கு வந்து, முன்னணி கதாநாயகியாக கருதப்பட்டவர்களில், அசினுக்கு என்றும் முதல் இடம் தான். அவருக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு எனக்கூறலாம்.

மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி: வைரலாகும் புகைப்படங்கள்

முன்னாள் நடிகை கௌதமி, தனது மகள் சுப்புலக்ஷ்மியுடன், ஒரு போட்டோஷூட் நிகழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

"வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்முறையாக துவங்கப்பட்ட

பொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்?

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30-ந்தேதி வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. குறிப்பாக குந்தவை கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், அலங்காரமும் பலரின் கற்பனைத்திறனை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது.

நோய் வாய்ப்பட்டுள்ள தயாரிப்பாளர் V.A துரையிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

பாலாவின் பிதாமகன், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கஜேந்திரா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. சமீபத்திய செய்திகளின்படி, இவர் சிலஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாகவும், அதோடு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் எனவும், அவர் உதவ வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

ஆதியின் 'சப்தம்' படத்தில் இணைகிறார் நடிகை லைலா

இயக்குனர் அறிவழகன், 'ஈரம்' படத்தை தொடர்ந்து ஆதியுடன் இணையும் படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்தை போலவே திரில்லர் ஜானெரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சென்ற வாரம், லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஒரே போன் காலில், ஒரு லட்சத்தை இழந்த நடிகை நக்மா

தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியிலும், 2000-களிலும் கோலோச்சியவர் நடிகை நக்மா.

பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ்

பாலாவின் அடுத்தப்படமான 'வணங்கான்' படத்தில், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக, 'ஜடா' படத்தின் ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும்-3

தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.

நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 2

தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால், பாடகர்களால், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும்.

'விடுதலை', 'பத்து தல' என இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் வரிசை

கடந்த இரு மாதங்களில் வெளியான 'வாத்தி', 'துணிவு', 'வாரிசு' போன்ற படங்களை தொடர்ந்து, இந்த மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 1

தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் சில, அவற்றின் இசையால் வெற்றி பெறும், சில பாடகர்கள், வரிகளால் வெற்றிபெறும், மற்றும் சில அதில் நடித்த நடிகர்களால் வெற்றி பெறும். சில படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த வரலாறும் உண்டு.

விஷாலுடன் இணைந்து, மற்றுமொரு போலீஸ் கதையை எடுக்க தயாராகும் டைரக்டர் ஹரி

இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லப்பர் பந்து: முதல் முறையாக 'அட்டகத்தி' தினேஷுடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர், அவர் நடித்த 'பொறியாளன்' படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். அதன் பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

"உண்மையிலேயே ஒரு லெஜண்ட்": பாரதிராஜாவை சந்தித்ததும் ரம்யா பாண்டியன் இட்ட ட்வீட்

நடிகை ரம்யா பாண்டியன், 'இயக்குனர் இமயம்', பாரதிராஜாவை சந்தித்துள்ளார். தற்செயலாக நடந்தது போல இருக்கும் அந்த சந்திப்பு பற்றி அவர் ஒரு நெகிழ்ச்சி பதிவை இட்டுள்ளார். கூடவே பாரதிராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்!

ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென், 1994 இல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கபோகிறாரா நடிகர் பார்த்திபன்?

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் M.K.தியாகராஜ பாகவதர். MKT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் படங்கள் அந்த காலத்திலேயே பல வெள்ளிவிழாக்களை கண்டது.

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ்

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்வது, உடலுக்கு நன்மை தரும் என வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.

நடிகை ஷாலினியையும், 'குட்டி தல' ஆத்விக்கையும் வரவேற்ற பாலிவுட் நடிகர்

நடிகை ஷாலினி, தனது மகன் ஆத்விக்குடன் ஒரு கால்பந்தாட்டத்தை காண சென்றது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று

வித்யாசாகர் ராமச்சந்திர ராவ் என்று பெயரிடப்பட்ட வித்யாசாகர், மார்ச் 2, 1963 அன்று ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தார். 19 -ஆம் நூற்றாண்டின் இந்திய கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.