Page Loader
பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கபோகிறாரா நடிகர் பார்த்திபன்?
படமாகிறதா தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை?

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கபோகிறாரா நடிகர் பார்த்திபன்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2023
07:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் M.K.தியாகராஜ பாகவதர். MKT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் படங்கள் அந்த காலத்திலேயே பல வெள்ளிவிழாக்களை கண்டது. அவரின், 114வது பிறந்தநாள் நேற்று (மார்ச்.,1). அந்நாளில் அவரை நினைவுகூரும் விதமாக நடிகர்-இயக்குனர் பார்த்திபன் ஒரு பதிவை இட்டிருந்தார். "தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். கடைசி ரீல் மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, திரைக்கதை தயாராக உள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளதால், ஹை-பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சம்மதித்தால், தான் இயக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

MKT குறித்து பார்த்திபன் பதிவு