Page Loader
இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள்
2023ல் கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகைகள்!

இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2023
04:25 pm

செய்தி முன்னோட்டம்

திரையுலகில் சமீப காலங்களில் பல திறமையுள்ள நடிகர், நடிகைகள் நிறைய பேர் நடிக்க வருகின்றனர். சிலர், மற்ற மொழிகளில் பிரபலமான பிறகு, இந்த ஆண்டு , தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகவிருக்கின்றனர். அவ்வாறு, வேறு மொழிகளில் இருந்து, தமிழ் திரையுலகிற்கு இந்த ஆண்டு, நடிக்க வந்த, நடிக்கவிருக்கும் சில நடிகைகளை பற்றி காண்போம். க்ரித்தி ஷெட்டி: இவர் ஏற்கனவே 'தி வாரியர்' என்ற தெலுங்கு படத்தின், தமிழ் பதிப்பின் மூலம், கோலிவுட்டிற்கு அறிமுகம் ஆகி இருந்தாலும், தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில், நாகா சைதன்யா நடிக்கும், 'கஸ்டடி' படத்தின் மூலம் நேரடியாக தமிழுக்கு வரவுள்ளார். தெலுங்கில் இவர் ஏற்கனவே பிரபலம் ஆனவர்.

தமிழ் திரைப்படம்

வாத்தி படம் மூலம் அறிமுகமான சம்யுக்தா மேனன்

திஷா பதானி: 'சூர்யா 42' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் ஹிந்தி படத்தின் பிரபல நாயகி திஷா பதானி. தற்காலிகமாக, 'சூர்யா 42' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 'சிறுத்தை' சிவா இயக்கி வருகிறார்.10 வெவ்வேறு மொழிகளில், பான் இந்தியன் படமாக இந்த படம் இத்தாண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சம்யுதா: மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா. அவர் சென்ற மாதம், 'வாத்தி' படம் மூலம், தனுஷிற்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் இந்த படத்தின் மூலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு சேர அறிமுகமானார்.