Page Loader
பொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்?
இளையபிராட்டி குந்தவை தேவியாக திரிஷா

பொன்னியின் செல்வனில், குந்தவை கதாபாத்திரத்தின் லுக்-ஐ எவ்வாறு வடிவமைத்தனர்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 09, 2023
06:19 pm

செய்தி முன்னோட்டம்

மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. முதல் பாகம், சென்ற ஆண்டு, செப்டம்பர் 30-ந்தேதி வெளியானதை அடுத்து, இரண்டாம் பாகம், அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. படத்தில் நடித்தவர்கள், அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தனர் என பாராட்டப்பட்டது. குறிப்பாக குந்தவை கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், அலங்காரமும் பலரின் கற்பனைத்திறனை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. படம் வெளி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில், திரிஷா எப்படி பொருந்திப்போனார் என்பதை விளக்கும் ஒரு வீடியோவை தயாரிப்பாளர்கள் தரப்பு இன்று வெளியிட்டுள்ளது. அதோடு, விரைவில் இரண்டாம் பாகத்தின், முதல் பாடல் வெளியாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

குந்தவையாக மாறிய திரிஷா!