
பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு
செய்தி முன்னோட்டம்
மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு படமான, பொன்னியின் செல்வன் 2 , அடுத்த மாதம், ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். படத்தை பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படத்தை பற்றி யூக அடிப்படையில் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், PS ரசிகர்களை ஆச்சரிய படுத்தும் விதமாக, லைகா நிறுவனம், ஒரு BTS விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் பேசியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
PS 2 BTS வீடியோ வெளியானது
A tiny glimpse into all the fun the team had while making #PS1 and #PS2! #PS2 in theatres worldwide from April 28 🔥#PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @IMAX @primevideoIN @chiyaan @actor_jayamravi @Karthi_Offl #Jayaram pic.twitter.com/bBsHJQ0LcO
— Lyca Productions (@LycaProductions) March 1, 2023
பொன்னியின் செல்வன் 2
விரைவில் PS2 ஆடியோ வெளியீடு?
இந்த திரைப்படத்தின், டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதியை இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே, PS 2 இன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் ஆடியோவும் ஒரே நாளில் நடத்தப்படும் என்றும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட விழாவாக நடைபெறும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டும் பெறப்பட்டுள்ளது என்றும், படத்தின் இசை வெளியானதும், இந்தியா முழுவதும் படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
படத்திற்கு இசை A.R. ரஹ்மான்.