Page Loader
'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள்
வாய்மொழி செய்தியால் வெற்றி அடைந்த சில படங்கள்

'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2023
01:37 pm

செய்தி முன்னோட்டம்

வாரந்தோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாக இருக்காது. சில சின்ன பட்ஜெட் படங்களும் வரும். அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதே அரிது. இதில் விளம்பரத்திற்கு எல்லாம் அந்த தயாரிப்பாளரால் செலவு செய்ய முடியாது. ஆனால் நல்ல படங்கள், விளம்பரமே இல்லையென்றாலும், தமிழ் ரசிகன், அதை தவற விடமாட்டான், என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். சேது: 'சீயான்' விக்ரம், தனது செகண்ட் இன்னிங்ஸ்-ஐ 'சேது' படம் மூலம் துவங்கினார். ஆனால், அந்த படத்திற்கு போதிய விளம்பரங்கள் இல்லாத காரணத்தால், முதல் நாள், திரையரங்கில் கூட்டமே இல்லை. ஆனால், வாய்மொழி விமர்சனங்கள் மூலம், ஒரே வாரத்தில் அந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது.

தமிழ் திரைப்படங்கள்

படத்தின் வெற்றி பார்வையாளரின் விமர்சனங்களில் தான் உள்ளது

துள்ளுவதோ இளமை: நடிகர் தனுஷின் அறிமுக படம். தணிக்கை துறையால் A செர்டிபிகேட் வாங்கி இருந்தால், இந்த படத்திற்கு முதல் நாள் கூட்டமே வரவில்லை என சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் தெரிவித்திருந்தார். ஆனால், அன்று இரவு முதல், கல்லூரி மாணவர்கள், இளம் ரசிகர்கள் மூலம் படம் மிகப்பெரிய வெற்றி என அறிவிக்கப்பட்டது. 'பிட்சா': விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான காலத்தில் வெளியான இந்த படம், குட்டி பட்ஜெட்டில் உருவானதால், பெரிதாக ப்ரோமோஷன்கள் செய்யப்படவில்லை. ஆனால் படத்தின் வெற்றி, அதை தொடர்ந்து மேலும் 3பாகங்கள் எடுக்கவைத்துள்ளது. அயோத்தி: சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்த படம், முதல் வாரம் சரியாக கூட்டம் சேரவில்லை. ஆனால் இந்த வாரத்திலிருந்து திரையரங்கம் நிரம்பி வழிகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன