
இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று
செய்தி முன்னோட்டம்
வித்யாசாகர் ராமச்சந்திர ராவ் என்று பெயரிடப்பட்ட வித்யாசாகர், மார்ச் 2, 1963 அன்று ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தார். 19 -ஆம் நூற்றாண்டின் இந்திய கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது தாத்தா வராஹ நரசிம்ம மூர்த்தி, விஜயநகர போபிலி மன்னரின் அரசவை 'வித்வானாக' பணியாற்றினாராம். இவர் தந்தை, யு.ராமச்சந்தர், 8 விதமான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடிய வித்தகன்.
இப்படி ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்தவர் வித்யாசாகர்.
வித்யாசாகர் தனது நாலாம் வயதில் இருந்தே, தன தந்தையிடம் இசைப்பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார்.
அதன் பின்னர், சென்னை வந்த வித்யாசாகர், திரைப்பட இசைக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
பிறந்தநாள்
தேசிய விருது வென்ற வித்யாசாகர்
பல முன்னணி இசையமைப்பாளர்களிடம், இசைக்கலைஞனாக பணி புரிந்த வித்யாசாகர், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பூ மனம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார்.
ஆனால், தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது, அர்ஜுனின், கர்ணா மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற திரைப்படங்கள் தான்.
அதில் இடம் பெற்ற மெலடி பாடல்கள், அவருக்கு புகழை தந்தது.
இருப்பினும், பெரிதாக படங்கள் இல்லாததால், அவர் மலையாள திரையுலகிற்கு சென்றார்.
அங்கு அவர் இசையமைத்த பாடல்கள் பல மாநில விருதுகளை வென்றது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக மலையாள திரைப்பட உலகில் பிஸியாக இருந்த வித்யாசாகர், 2005 -ஆம் ஆண்டு, கே. விஸ்வநாதன் ஸ்வராபிஷேகம் என்ற தெலுங்கு படத்துக்காக தேசிய விருதை வென்றார்.