
பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ்
செய்தி முன்னோட்டம்
பாலாவின் அடுத்தப்படமான 'வணங்கான்' படத்தில், சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடிக்க போகிறார் என பேச்சுகள் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக, 'ஜடா' படத்தின் ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில், அருண் விஜய் காதுகேளாத மற்றும் பேச்சுத் திறனற்றவராக நடிக்கிறார்.
இந்த படத்தின், படப்பிடிப்பு, இந்த வாரத்தில் துவங்கும் என்றும், செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில், முதலில் ஹீரோவாக கமிட் ஆனது சூர்யா. ஆனால் பாலாவிற்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக அவர் விலகிவிட, தற்போது அவர் இடத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கிறார்.
அதேபோல நாயகியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் க்ரித்தி ஷெட்டி. தற்போது, அவரும் விலகிவிட, அவருக்கு பதில் கன்னட நடிகை ரோஷ்னி நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
பாலாவின் 'வணங்கான்' அப்டேட்
#Vanangaan 📢🎬#RoshniPrakash | #ArunVijay | #Bala pic.twitter.com/GWB6ogfNHy
— KollywoodUpdate 2.0 (@Kollywoodupoffl) March 6, 2023