Page Loader
அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவிப்பு

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

A.L. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் பிரதான படப்பிடிப்பு, சென்னை மற்றும் லண்டனில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனில் இருந்தபோது தான் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெகு விரைவாக, 70 நாட்களில் முடிக்கப்பட்டதென, அந்த படத்தின் தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை, ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இவருடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பு தளத்தில் இருந்து..

ட்விட்டர் அஞ்சல்

அச்சம் என்பது இல்லையே!

ட்விட்டர் அஞ்சல்

'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு நிறைவு